குடந்தை மாவட்ட NFTE ஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது....
தோழர்களே! தோழியர்களே!! நம் வாழ்வு காத்திட, நம் நிறுவனம் நிலைத்திட வாக்களியுங்கள் இணைந்த கரங்களில்! தேர்வு செய்வீர் எண் : 13. நன்றி.........

Thursday, December 30, 2010

புத்தாண்டு-௨011 நல்வாழ்த்துக்கள்

தோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நல்வாழ்த்துக்களுடன்
NFTE & TMTCLU மாவட்ட சங்கங்கள்.



Saturday, December 25, 2010

சுனாமி - 6 - வது ஆண்டு நினைவஞ்சலி






இன்று டிசம்பர்-26 : கால அரக்கணின் ருத்ர தாண்டவம் நடந்து 5 ஆண்டுகள் முடிந்து 6 - வது ஆண்டுகள் ஆகின்றது.

சுனாமி பேரழிவால் உயிரிழந்த அனைவருக்கும் நமது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்வோம்.
தோழமையுடன்
NFTE & TMTCLU மாவட்டச் சங்கங்கள்.

கிறிஸ்தமஸ் நல்வாழ்த்துக்கள்

தோழர்கள் அனைவருக்கும் கிறிஸ்தமஸ் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
TMTCLU மாவட்ட சங்கம்

Wednesday, December 8, 2010

கண்ணீர் அஞ்சலி

நமது NFTE மாவட்டச் செயலாளர் தோழர்.பாஸ்கரன் அவர்களது மூத்த சகோதரர் S. ஜெயபால் அவர்கள் நேற்று (08.12.2010) மாலை இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் இன்று (09.12.2010) மாலை 4 மணி அளவில் விடையல் கருப்பூர் அவரது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது பிரிவில் வாடும் தோழர் மற்றும் அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இரங்கலுடன்
NFTE & TMTCLU மாவட்ட சங்கம்

Monday, December 6, 2010

குடந்தை மாவட்ட தலைவரை பாராட்டும் தஞ்சை மாவட்ட சங்கம்

குடந்தைத் தந்தைக்கு குதூகல விழா!
விழாவினைப் பார்த்து ரசித்து வந்த பின் இந்தத் தலைப்புதான் தோன்றியது. ஆம் குடந்தையின் இளம் சிங்கங்கள் எல்லா வகையிலும் திறம்பட நடத்திக் காட்டிய விழா என்றால் மிகையாகாது.
தமது பணியினை மிக நிறைவாக, மிக, மிக நிறைவாக செய்து (முடித்து) ஓய்வு பெறுகிறார் என்பதை விழா மெய்ப்பித்தது.
அனைத்துக் கட்சி நண்பர்கள், பல்வேறு இயக்கத் தோழர்கள் உவகையோடு பங்கேற்றுப் பேசினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நல்லக்கண்ணு, AITUC பொது செயலாளர் S.S. தியாகராஜன், தலைவர் A.M. கோபு ஆகியோர் சிறப்புக்களைச் சொல்லி வாழ்த்தினார்கள். நமது தலைவர்கள் ஏறக்குறைய அனைவருமே பங்கேற்றார்கள். RK, பட்டாபி, தமிழ்மணி, N. வீரபாண்டியன், G. ஜெயராமன், S.S. கோபாலகிருஷ்ணன், K.S.K, குடந்தை மாலி ஆகியோரின் பேச்சுக்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.
தோழர் ஜெயபால் அவர்கள் மகளின் பேச்சு கருத்து மிகுந்த பேச்சு. ( மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்). R.K அவர்கள் குறைந்த நேரத்தில் நிறைவான உரையினைத் தந்தார். அறக்கட்டளைப் பணியினைத் துவக்கிட ஜெயபால் அவர்களை கேட்டுக் கொண்டு ரூபாய் 1001 கொடுத்து துவக்கி வைத்தார். ரூபாய் ஒரு லட்சத்திற்கு தானே பொறுப்பேற்பதாக உறுதி அளித்தார்.
அற்புதமான வரவேற்பு, உபசரிப்பு, விருந்து. இன்னும் எவ்வளவோ.
தலைவரின் ஓய்வுக் காலம் அவருக்கு மேலும் மன மகிழ்ச்சியை, நல்ல உடல் நலத்தை பெற்று சிறப்புடன் வாழ நமது தஞ்சை வலைத தளமும் வாழ்த்தி மகிழ்கிறது.

தோழமையுடன்,
K. நடராஜன், S. சிவசிதம்பரம்
தமிழ் மாநில சங்கப் பொறுப்பாளர்கள்.

Wednesday, December 1, 2010

நமது மாவட்ட தலைவருக்கு பாராட்டு விழா

நமது குடந்தைக் கோட்ட குப்தா, அநீதிகளை களைய சாட்டையை சுழற்றும் மாவீரன், தொழிலாளிக்காக தியாகம் பல செய்த தியாகச் சுடர், நமது மாவட்ட ஒப்பற்ற தலைவர் தோழர். R. ஜெயபால் அவர்களது பணி ஓய்வு பாராட்டு விழாவின் தொடக்கம் தோழரின் "தோழமைத் தோட்டம்" அமைந்துள்ள நகரிலிருந்து மரக் கன்று நடுதளுடன் வெகு விமரிசையாக தொடங்கியது. மரக் கன்று நட்டு அந்த மரக் கன்று எப்படி தழைத்தோங்கி வளர்கிறதோ அது போல் தான் சார்ந்த இயக்கம் தழைத்தோங்கட்டும் என தங்க தலைவரின் கையால் மரக் கன்று நட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா நாயகர் தோழர்கள் பலர் புடைசூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

தலைவரின் பணி ஓய்வு பாராட்டு விழா GM Champer - ல் காலையிலும், மனமகிழ் மன்றத்தின் சார்பாக மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணி வரை நடை பெற்றது. இதில் கால நேரம் பாராமல் தோழர், தோழியர்கள் இறுதி வரை இருந்து சிறப்பித்தது பாராட்டுக்குரியது.

காலை GM champer - ல் நடந்த விழாவும் சரி, மாலை மனமகிழ் மன்றத்தில் நடந்த விழாவும் சரி, இது போன்ற பணி ஓய்வு பாராட்டு விழா குடந்தை மாவட்டத்தில் இதுவரை நடந்ததில்லை. இனி நடக்கப் போவதும் இல்லை என்ற அளவிற்கு அனைத்து சங்க தோழர்களும், அதிகாரிகளும் வந்து பாராட்டிய மாண்பு நமது தலைவரின் உயர்ந்த தொண்டை பறை சாற்றியது.

தலைவர் ஏற்புரை நல்கியபோது வானமே "இப்படி ஒரு மனிதன் வாழ்ந்து சாதித்து இந்த இலாக்கவிளிருந்து ஓய்வு பெருகின்றாரே" என்று கண்ணீர் விடுவது போல் மழையாக கொட்டித் தீர்த்தது.
எது எப்படியோ நம்மை வழிநடத்த இனி எவர் இருக்கிறார் என கவலை பட்டு கொண்டிருந்த நேரத்தில் நான் எங்கு செல்ல இருக்கிறேன்? என் வாழ்கை எப்போதும் உங்களோடுதான். உங்களை எல்லாம் வழி நடத்துவேன் என தனது ஏற்புரையில் தலைவர் கூறியது அனைவருக்கும் பெரும் நிம்மதியை அளிப்பதாக இருந்தது.

  • காலமுட்டும் வாழும் உங்கள் சாதனை!
  • பணி ஓய்வு மட்டும் தவிர்க்க முடியா வேதனை!!
  • நல்லவராய் வாழ்ந்ததென்ன வாழ்க்கையிலே!
  • ஒரு வல்லவராய் திகழ்ந்ததென்ன நாங்கள் பார்க்கையிலே!!
  • நம்மில் பிரிவு என்பதில்லை எங்கள் தங்கமே!
  • பணி ஓய்வுறும் நீதான் எங்கள் சிங்கமே!!

நன்றியுடன்,

குடந்தை மாவட்ட NFTE ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்