குடந்தை மாவட்ட NFTE ஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது....
தோழர்களே! தோழியர்களே!! நம் வாழ்வு காத்திட, நம் நிறுவனம் நிலைத்திட வாக்களியுங்கள் இணைந்த கரங்களில்! தேர்வு செய்வீர் எண் : 13. நன்றி.........

Thursday, December 30, 2010

புத்தாண்டு-௨011 நல்வாழ்த்துக்கள்

தோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நல்வாழ்த்துக்களுடன்
NFTE & TMTCLU மாவட்ட சங்கங்கள்.



Saturday, December 25, 2010

சுனாமி - 6 - வது ஆண்டு நினைவஞ்சலி






இன்று டிசம்பர்-26 : கால அரக்கணின் ருத்ர தாண்டவம் நடந்து 5 ஆண்டுகள் முடிந்து 6 - வது ஆண்டுகள் ஆகின்றது.

சுனாமி பேரழிவால் உயிரிழந்த அனைவருக்கும் நமது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்வோம்.
தோழமையுடன்
NFTE & TMTCLU மாவட்டச் சங்கங்கள்.

கிறிஸ்தமஸ் நல்வாழ்த்துக்கள்

தோழர்கள் அனைவருக்கும் கிறிஸ்தமஸ் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
TMTCLU மாவட்ட சங்கம்

Wednesday, December 8, 2010

கண்ணீர் அஞ்சலி

நமது NFTE மாவட்டச் செயலாளர் தோழர்.பாஸ்கரன் அவர்களது மூத்த சகோதரர் S. ஜெயபால் அவர்கள் நேற்று (08.12.2010) மாலை இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் இன்று (09.12.2010) மாலை 4 மணி அளவில் விடையல் கருப்பூர் அவரது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது பிரிவில் வாடும் தோழர் மற்றும் அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இரங்கலுடன்
NFTE & TMTCLU மாவட்ட சங்கம்

Monday, December 6, 2010

குடந்தை மாவட்ட தலைவரை பாராட்டும் தஞ்சை மாவட்ட சங்கம்

குடந்தைத் தந்தைக்கு குதூகல விழா!
விழாவினைப் பார்த்து ரசித்து வந்த பின் இந்தத் தலைப்புதான் தோன்றியது. ஆம் குடந்தையின் இளம் சிங்கங்கள் எல்லா வகையிலும் திறம்பட நடத்திக் காட்டிய விழா என்றால் மிகையாகாது.
தமது பணியினை மிக நிறைவாக, மிக, மிக நிறைவாக செய்து (முடித்து) ஓய்வு பெறுகிறார் என்பதை விழா மெய்ப்பித்தது.
அனைத்துக் கட்சி நண்பர்கள், பல்வேறு இயக்கத் தோழர்கள் உவகையோடு பங்கேற்றுப் பேசினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நல்லக்கண்ணு, AITUC பொது செயலாளர் S.S. தியாகராஜன், தலைவர் A.M. கோபு ஆகியோர் சிறப்புக்களைச் சொல்லி வாழ்த்தினார்கள். நமது தலைவர்கள் ஏறக்குறைய அனைவருமே பங்கேற்றார்கள். RK, பட்டாபி, தமிழ்மணி, N. வீரபாண்டியன், G. ஜெயராமன், S.S. கோபாலகிருஷ்ணன், K.S.K, குடந்தை மாலி ஆகியோரின் பேச்சுக்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.
தோழர் ஜெயபால் அவர்கள் மகளின் பேச்சு கருத்து மிகுந்த பேச்சு. ( மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்). R.K அவர்கள் குறைந்த நேரத்தில் நிறைவான உரையினைத் தந்தார். அறக்கட்டளைப் பணியினைத் துவக்கிட ஜெயபால் அவர்களை கேட்டுக் கொண்டு ரூபாய் 1001 கொடுத்து துவக்கி வைத்தார். ரூபாய் ஒரு லட்சத்திற்கு தானே பொறுப்பேற்பதாக உறுதி அளித்தார்.
அற்புதமான வரவேற்பு, உபசரிப்பு, விருந்து. இன்னும் எவ்வளவோ.
தலைவரின் ஓய்வுக் காலம் அவருக்கு மேலும் மன மகிழ்ச்சியை, நல்ல உடல் நலத்தை பெற்று சிறப்புடன் வாழ நமது தஞ்சை வலைத தளமும் வாழ்த்தி மகிழ்கிறது.

தோழமையுடன்,
K. நடராஜன், S. சிவசிதம்பரம்
தமிழ் மாநில சங்கப் பொறுப்பாளர்கள்.

Wednesday, December 1, 2010

நமது மாவட்ட தலைவருக்கு பாராட்டு விழா

நமது குடந்தைக் கோட்ட குப்தா, அநீதிகளை களைய சாட்டையை சுழற்றும் மாவீரன், தொழிலாளிக்காக தியாகம் பல செய்த தியாகச் சுடர், நமது மாவட்ட ஒப்பற்ற தலைவர் தோழர். R. ஜெயபால் அவர்களது பணி ஓய்வு பாராட்டு விழாவின் தொடக்கம் தோழரின் "தோழமைத் தோட்டம்" அமைந்துள்ள நகரிலிருந்து மரக் கன்று நடுதளுடன் வெகு விமரிசையாக தொடங்கியது. மரக் கன்று நட்டு அந்த மரக் கன்று எப்படி தழைத்தோங்கி வளர்கிறதோ அது போல் தான் சார்ந்த இயக்கம் தழைத்தோங்கட்டும் என தங்க தலைவரின் கையால் மரக் கன்று நட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா நாயகர் தோழர்கள் பலர் புடைசூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

தலைவரின் பணி ஓய்வு பாராட்டு விழா GM Champer - ல் காலையிலும், மனமகிழ் மன்றத்தின் சார்பாக மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணி வரை நடை பெற்றது. இதில் கால நேரம் பாராமல் தோழர், தோழியர்கள் இறுதி வரை இருந்து சிறப்பித்தது பாராட்டுக்குரியது.

காலை GM champer - ல் நடந்த விழாவும் சரி, மாலை மனமகிழ் மன்றத்தில் நடந்த விழாவும் சரி, இது போன்ற பணி ஓய்வு பாராட்டு விழா குடந்தை மாவட்டத்தில் இதுவரை நடந்ததில்லை. இனி நடக்கப் போவதும் இல்லை என்ற அளவிற்கு அனைத்து சங்க தோழர்களும், அதிகாரிகளும் வந்து பாராட்டிய மாண்பு நமது தலைவரின் உயர்ந்த தொண்டை பறை சாற்றியது.

தலைவர் ஏற்புரை நல்கியபோது வானமே "இப்படி ஒரு மனிதன் வாழ்ந்து சாதித்து இந்த இலாக்கவிளிருந்து ஓய்வு பெருகின்றாரே" என்று கண்ணீர் விடுவது போல் மழையாக கொட்டித் தீர்த்தது.
எது எப்படியோ நம்மை வழிநடத்த இனி எவர் இருக்கிறார் என கவலை பட்டு கொண்டிருந்த நேரத்தில் நான் எங்கு செல்ல இருக்கிறேன்? என் வாழ்கை எப்போதும் உங்களோடுதான். உங்களை எல்லாம் வழி நடத்துவேன் என தனது ஏற்புரையில் தலைவர் கூறியது அனைவருக்கும் பெரும் நிம்மதியை அளிப்பதாக இருந்தது.

  • காலமுட்டும் வாழும் உங்கள் சாதனை!
  • பணி ஓய்வு மட்டும் தவிர்க்க முடியா வேதனை!!
  • நல்லவராய் வாழ்ந்ததென்ன வாழ்க்கையிலே!
  • ஒரு வல்லவராய் திகழ்ந்ததென்ன நாங்கள் பார்க்கையிலே!!
  • நம்மில் பிரிவு என்பதில்லை எங்கள் தங்கமே!
  • பணி ஓய்வுறும் நீதான் எங்கள் சிங்கமே!!

நன்றியுடன்,

குடந்தை மாவட்ட NFTE ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்

Monday, November 29, 2010

பணி நிறைவு பாராட்டு விழா

இன்று (30.11.2010) பணி ஓய்வு பெரும் குடந்தைக் கோட்டகுப்தா, ஓய்வறைய சிங்கம், இயக்கத்தின் இமயம், குடந்தை கோட்ட NFTE ஆலமரத்தின் ஆணிவேர், ஒப்பந்தத் தொழிலாளியின் ஒளிவிளக்கு எங்களின் உயிர்நாடி

"தோழர். R. ஜெயபால்"

அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

வாழ்த்துக்களுடன்

TMTCLU மாவட்ட சங்கம்

Monday, November 15, 2010

செங்கொடி தாழ்த்திய வீர வணக்கம்

தஞ்சை மாவட்ட NFTE - இன் மாவட்ட செயலர் தோழர். M. கேசவன் 15.11.2010 மாலை 6 மணியளவில் இயற்கை எய்தினார். தோழருக்கு எங்களது செங்கொடி தாழ்த்திய வீர வணக்கம்.....
தோழரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கும், தஞ்சை மாவட்ட NFTE தோழர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இரங்கலுடன்
குடந்தை NFTE மாவட்ட சங்கம்
&
TMTCLU மாவட்ட சங்கம்.

Tuesday, November 2, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்






தோழர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.



வாழ்த்துக்களுடன்

NFTE & TMTCLU மாவட்ட சங்கங்கள்

சம்பளம் & போனஸ்

அக்டோபர் மாத சம்பளம் மற்றும் போனஸ் - 6 மணி நேரத்திற்கு Rs.630/-, 6.30 மணி நேரத்திற்கு Rs.682/- வீதம் ஒப்பந்தகாறரால் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.
போனஸ் குறித்து நமது சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஒப்பந்தக்காரர் அடுத்த மாத சம்பளத்துடன் நமது சங்கத்தால் ஒப்புக்கொள்ளப்படும் போனஸ் தொகையை செலுத்துவதாக கூறியுள்ளார்.
போனஸ் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

தகவலுக்காக
TMTCLU மாவட்ட சங்கம்.

Saturday, October 30, 2010

போனஸ் பேச்சுவார்த்தை

ஒப்பந்தத் தொழிலாளிக்கு போனஸ் வழங்க நமது NFTE சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் :

1) ஒப்பந்தத் தொழிலாளிக்கு போனஸ் வழங்குவது குறித்து நமது பொது மேலாளரிடம் கடந்த புதன் அன்று NFTE மாவட்ட சங்கம் ஒரு கடிதம் கொடுத்தது. அதில் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 8.33% வீதம் ஒப்பந்தக்காரர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அதற்கு பொது மேலாளர் விகிதாசார (PRORATA BASIS) முறையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தார்.
2) ஒப்பந்தக்காரர் திரு.பாண்டியன் அவர்களிடம் இன்று (30.10.2010) நமது NFTE மாவட்ட சங்கத் தலைவர் தோழர். R. ஜெயபால், மாவட்ட செயலர் தோழர்.S. பாஸ்கரன், தோழர்கள்.கலியமூர்த்தி, C.கணேசன், ஸ்ரீனிவாசன், விஜய் ஆரோக்கியராஜ் ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒப்பந்தக்காரர் 8 மணி நேரம் வேலை பார்ப்பவருக்கு வருடத்திற்கு Rs.2000/- வழங்குவதாக கூறுகிறார். மேலும் 6 மாதகாலமாக கேபிள் பழுது பார்க்கும் தோழர்களுக்கு Rs.1000/- தருகிறேன். ஹவுஸ் கீப்பிங் டெண்டர் ஆரம்பித்து 5 மாதம் தானே ஆகின்றது என தொகை குறிப்பிடாமல் பேசினார்.
ஒப்பந்தக்காரர் பேசுவதை பார்த்தால் நமக்கு Rs.625/- தான் கிடைக்கும். நாம் நமது கோரிக்கையான 8.33% படி Rs.1200/- வழங்க வலியுறித்தி உள்ளோம்.
ஒப்பந்தக்காரர் திங்கள் (01.11.2010) அன்று குடந்தை வந்து நேரில் நமது சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி இருக்கிறார்.
தோழமையுடன்,
TMTCLU மாவட்ட சங்கம்
30.10.2010.

Monday, October 25, 2010

ஒப்பந்தத் தொழிலாளிக்கு - போனஸ்?

ஓப்பன் டெண்டர் முறை வந்தால் போனஸ் கிடைக்கும் என்று நிர்வாகமும் ஓபன் டெண்டர் முறைக்கு வக்காலத்து வாங்கிய ஏனய சங்கங்களும் சொல்லியது என்னவாயிற்று?

போனஸ் பற்றி - ஒரு விளக்கம்.
நிர்வாகத்தால் வெளிடப்பட்ட டெண்டர் டாக்குமெண்டில் பாரா-21 : ஏஜென்சியும் அதன் பொறுப்புகளும் என்ற தலைப்பில் பகுதி - m) - இல்
போனஸ் பற்றி குறிப்பிடப் பட்டிருப்பது என்னவென்றால் ஒப்பந்தக்காரர் அரசின் போனஸ் நடைமுறைப்படிவருடத்திற்கு ஒருமுறை 8.33% போனஸ் அதாவது வருடத்திற்கு - 1 மாத சம்பளம் போனசாக அவரது லாபத்திலிருந்து தொழிலாளிக்கு தரவேண்டும். அதுவும் தீபாவளிக்கு முன்னால் பேமென்ட் செய்யவேண்டும் என்று உள்ளது.
இதைப் பற்றி ஒப்பந்தக்காரரிடம் கேட்டால் 4 மாதம் தானே ஆகின்றது. அதனால் மாதம் ஒன்றுக்கு 150 வீதம் ருபாய் 600 தந்து விடுகிறேன் என்கிறார். இது ஏற்புடையது அல்ல.
ஏனனில் 6 மணி நேரம் வேலை செய்யும் தோழருக்கு மாதம் Rs.2892/- என்றால் ஒப்பந்தக்காரர் போனசாக Rs.2892/- தரவேண்டும். ஒப்பந்தக்காரர் கூறுவது போல் வைத்தாலும் ஜூன் முதல் அக்டோபர் வரை 5 மாதத்திற்கு Rs.2892/- ஐ 12 ஆல் வகுத்தால் மாதம் ஒன்றுக்கு Rs.241/- அதை 5 மாதத்திற்கு கணக்கிட்டால் Rs.1205/- வருகிறது.
முறைப்படி 5 மாதத்திற்கு உள்ள போனசாக இந்த தீபாவளிக்குள் Rs.1200/- பெற வேண்டியது நமது கடமை / உரிமை. இன்று (25.10.2010)
இது பற்றி DE(ADMN) அவர்களிடம் பேசி இருக்கிறோம். நாளை பதில் சொல்வதாக சொல்லி இருக்கிறார்.
உரிமைக்காக போராடுவோம்!! நமது உரிமையை வென்றெடுப்போம்!!
போராட்ட வாழ்த்துக்களுடன்,
TMTCLU மாவட்ட சங்கம்.

Tuesday, October 12, 2010

ஒப்பந்த தொழிலாளியின் ஊதியம் ?

ஓபன் டெண்டர் வந்தால் மாதந்தோறும் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என்று நிர்வாகமும் ஓபன் டெண்டருக்கு வக்காலத்து வாங்கிய ஏனைய சங்கங்களும் சொன்னன.
BSNL-லில் பில் பெண்டிங் பற்றி கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தக்காரர் ஒவ்வொரு மாதமும் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்று டெண்டர் கண்டிஷன்-இல் பாரா - 21.1-இல் உள்ளது. ஆனால் 01.06.2010 முதல் இன்று வரை 4 மாதமும் ஒரு மாதம் கூட ஒப்பந்தக்காரர் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கியது கிடையாது.
காண்ட்ராக்ட் மேனேஜர் வசம் சம்பளம் பற்றி கேட்கும் நம் தோழர்களிடம் BSNL-லில் பில் பெண்டிங் உள்ளது. அதனால் பில் வந்தவுடன் தான் பேமென்ட் தருவேன் எனக் கூறுகிறார். இது விதிமுறைகளை மீறிய செயல். இதனை நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
மேலும் டெண்டர் கண்டிஷன்-இல் பாரா - 22-இல் மாதந்தோறும் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப் படாவிடில் 1% பெனாலிட்டி விதிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு அதிகாரியும் இந்த நான்குமாத பில் தொகையில் பெனாலிட்டி விதிக்காதது ஏன்?
இது பற்றி NFTE மாவட்ட சங்கம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளது.


தோழமையுடன்
TMTCLU - மாவட்ட சங்கம், குடந்தை



Sunday, October 3, 2010

தேசப் பிதா பிறந்த தினம்

இன்று அக்டோபர் - ௨!! நமது தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினம்.
அன்பை வெளிப்படுத்தி . . .
உண்மையை வலியுறுத்தி . . .
நல்லிணக்கத்தை போதித்து . . .
அகிம்சையை ஆயுதமாக்கி . . .
இந்திய விடுதலையை முன் நிறுத்தி . . .
போராடிய, முதன்மைப் போராளி . . .
அண்ணல் காந்தி அவர்களின் பிறந்த நாளாம்
அக்டோபர் 2 - ல் . . .
அவர்தம் சிந்தனையைப் போற்றுவோம்!
கடைபிடிக்க உறுதியேற்போம்!!


Wednesday, September 29, 2010

இணைய தளம் - ஒரு எச்சரிக்கை தகவல்

உலகம் முழுவதுமே இணைய தளக் குற்றங்கள் எனப்படும் சைபர் குற்றங்கள் சகஜமாக நடக்கின்றதென்றாலும், இத்தகைய சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம் குறிவைத்து மொட்டையடிப்பதென்னவோ இந்தியர்களைத்தான் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று!

இணைய தளங்களில் வலம் வரும் இந்தியர்களில் 76 விழுக்காட்டினர் கம்ப்யூட்டர் வைரஸ், ஆன் லைன் கிரெடிட் கார்டு மோசடி, வங்கி ரகசிய எண்ணை திருடி பணத்தை சுருட்டுதல் போன்ற சைபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்களுக்கு ஆட்படுபவர்களாகவே உள்ளதாம்! சர்வதேச அளவில் இணைய தளங்களை பயன்படுத்துவோர்களில் 65 விழுக்காட்டினர் மேற்கூறிய ஏதாவது ஒரு மோசடி அல்லது பாதிப்பை எதிர்கொண்டவர்களாகவே உள்ளதாகவும், ஆனால் இந்த மோசடி இந்தியர்களை இன்னும் அதிகமாக பாதிப்பதாகவும் கூறுகிறது "நார்ட்டான் சைபர் கிரைம் ரிப்போர்ட்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை. அதிலும் சமீப காலமாக இந்தியா முழுவதுமே பரவலாக இணைய தளங்களை பயன்படுத்துவோர்களது இமெயில் முகவரிக்கு, " உங்களுக்கு லண்டன் லாட்டரியில் இத்தனை கோடி பணம் விழுந்துள்ளது; மேற்கொண்டு விவரம் பெற இந்த முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்!" என்று கூறி ஒரு டுபாக்கூர் முகவரியை கொடுத்திருப்பார்கள் அந்த மெயிலை அனுப்பியவர்கள்! "ஆஹா லட்சுமி தேவி கண்ண தொறந்துட்டாடா...!" என்று பதில் மெயில் அனுப்பினால், "சிக்கிட்டாண்டா ஏமாளி!" என்ற ரீதியில் வரும் பதிலில், உங்களுக்கான லாட்டரி பரிசை அனுப்பி வைப்பதற்கு சேவை கட்டணம் தேவைப்படுவதால், அதனை அனுப்பி வையுங்கள் என்று ஆளுக்கு தகுந்தபடி ஐந்து லட்சமோ அல்லது பத்து லட்சமோ குறிப்பிட்டு, ஒரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி வைப்பார்கள். சரி பரிசுதான் கோடிக்கணக்கில் வரப்போகிறதே... என்ற எண்ணத்தில் கையில் இருப்பது, வங்கியில் இருப்பது, போதாதற்கு கடன் என்று அடித்து பிடித்து அந்த தொகையை அனுப்பி வைப்பார்கள் சில அப்பாவி கோவிந்துகள்.அததோடு சரி! பரிசு தொகை பட்டை நாமம்தான்; மேற்கொண்டு எந்த பதிலும் வராது! அதற்கு பிறகு பணத்தை அனுப்பியவர்கள் சுதாரித்து காவல்துறையில் புகார் அளித்து, பணம் போட்ட வங்கி கணக்கை ட்ரேஸ் செய்தால், அந்த பணம் வழித்து துடைக்கப்பட்டிருக்கும்;கூடவே அக்கவுண்டும் க்ளோஸ் ஆகி, வங்கியில் கொடுத்த முகவரியும் டுபாக்கூர் என்று தெரியும். அப்போதுதான் ஆஹா மோசம் போனமே என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுவார்கள். இது ஒரு உதாரணம்தான்! எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர் மரணமடைந்துவிட்டார். அவருக்கு வாரிசு யாரும் இல்லை.உங்களது பெயரும் அவரது பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் அதை உங்களது பெயருக்கு அனுப்புகிறோம். இருவரும் பாதிப்பாதி பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று கதை விட்டு மேற்கூறிய மாதிரியே சுருட்டி விடுவார்கள்.

இதுபோன்ற மோசடிகள் இன்னும் வகை வகையாய் "ஒக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!" என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதுதவிர எங்கிருந்தோ சுட்ட பெண்களின் படத்தை மார்ஃபிங் செய்து, அவர்களை ஆபாசமாக சித்தரித்து இணைய தளங்களில் உலாவ விடுவது, படு தீவிரமாக நாம் ஒரு தகவலை பெறுவதற்காக இணைய தளங்களில் மேய்ந்துகொண்டிருக்கும்போது, நாம் க்ளிக் செய்யாமலேயே, கணினி திரையின் ஓரம் வந்து அழைப்பு விடுக்கும் பெண்கள் படம், அதில் சபலப்பட்டு தொடர்புகொள்பவர்கள் பணம் உள்ளிடவற்றை இழந்து, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சமயங்களில் சக்கையாய் அடி உதைபட்டு திரும்புவதும் உண்டு.

இப்படி உலக அளவில் இணைய தளங்கள் மூலமாக அதிகம் மோசடிக்குள்ளாவது இந்தியர்கள்தான் என்று கூறும் இந்த ஆய்வை நடத்திய "செக்யூரிட்டி சொலியுசன்ஸ் புரவைடர் சிமேன்டெக்" என்ற நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கவுரவ் கன்வால், இணைய தளங்கள் மூலம் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் 60 விழுக்காடு கம்ப்யூட்டர் வைரஸ் மற்றும் மால்வேர் (malware) - தீமையை ஏற்படுத்தும் மென்பொருள் - ஆகியவைதான் என்கிறார்!

" இன்றைய சைபர் கிரிமினல்கள் குறிவைப்பது ஆன் லைனில் புதிதாக வலம் வரும் மற்றும் அப்பாவி நபர்களைத்தான்.இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள், யாரை சந்தித்து இது குறித்து முறையிடுவது என்பதை அறியாதவர்களாகவும், உதவ யாரும் இல்லை என்று நினைப்பவர்களாகவும் உள்ளனர் என்பதுதான் இதில் சோகமான விடயம்" என்று வருத்தம் தொனிக்க கூறுகிறார் கவுரவ்.

இப்படி யாரிடம் புகார் அளிப்பது என்று தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்பது ஒருபுற இருந்தாலும், 58 விழுக்காட்டினர் அது குறித்து கோபமடைவதாகவும், 51 விழுக்காட்டினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாகவும், 46 விழுக்காட்டினர் மனமுடைந்து அல்லது மன அங்கலாய்ப்புக்கு ஆளாகுவதாகவும் அந்த ஆய்வறிக்கை! அதே சமயம் இதில் பெரும்பான்மையானவர்கள் - 88 விழுக்காட்டினர் - நடந்துபோன மோசடிக்கு தாங்கள்தான் காரணம் என்று தங்களைத் தாங்களே நொந்துக் கொள்கிறார்களாம்!

மேலும் இத்தகைய சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை; அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 57 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காரணங்களாலேயே இத்தகைய கிரிமினல் பேர் வழிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தெனாவட்டாக வளைய வருகிறார்கள். "இது எதுமாதிரி இருக்கிறதென்றால் கார்களை பற்றி உங்களுக்கு ஏதும் அதிகம் தெரியாத நிலையில், மெக்கானிக் என்ன சொல்கிறாரோ அதனைக் கேட்டுக்கொண்டுதான் தீர வேண்டியதிருக்கிறது. அது குறித்து அவரிடம் அதிகமாக ஏதும் வாதம் செய்ய முடியாது. அத்தகையதொரு நிலையை நீங்கள் மோசமாக கருதினாலும்; அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொண்டுதான் தீருகிறீர்கள்.அதுபோன்ற நிலையில்தான் சைபர் குற்றங்களுக்கு ஆளானவர்களின் நிலையும்" என்கிறார் கவுரவ். மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்களை தீர்ப்பது இந்தியாவில் மிகக்கடினமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் ஒரு சைபர் குற்றத்தை தீர்க்க சராசரியாக 44 நாட்கள் ஆகின்றன.அதற்கான செலவுத் தொலையும் சராசரியாக 5,262 ஆக உள்ளது. அதே சமயம் சர்வதேச அளவில் இது முறையே 28 நாட்களாகவும், 15,000 ரூபாயாகவும் உள்ளதாக கூறுகிறது அந்த ஆய்வறிக்கை. " இதுபோன்ற இணைய தள மோசடிக்கு ஆளாகுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்துப்போய் நின்றுவிடுகின்றனர்.

வங்கிகள் மற்றும் அரசாங்கமும் சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ள போதிலும், இன்னும் அதிகமாக மேற்கொள்வது அவசியமாக உள்ளது. " மிக லேட்டஸ்ட்டான பாதுகாப்பு மென்பொருள்களை நிறுவிக்கொள்வது, நிதி பரிமாற்றம் தொடர்பான விவரங்களையோ அல்லது தங்களைப்பற்றிய விவரங்களையோ ஆன் லைனில் யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது, சந்தேகத்திற்குரிய மெயில்கள் மற்றும் 'லிங்' - link - குகளை திறக்காமல் இருப்பது போன்ற ஒரு சில எளிதான வழிகளில் இணைய தளங்களில் உலா வருவோர் தங்களையும், தங்களது கணினிகளையும் பாதுகாத்துக்கொள்ளலாம்" என்று கூறுகிறார் கவுரவ்!

மொத்தத்தில் இணைய தளங்களில் உலா வருபவர்களுக்கு தேவை எச்சரிக்கை உணர்வும், சபலங்களுக்கு ஆட்படா மன உறுதியும்தான்!

Monday, September 27, 2010

ஆடுதுறை கிளை மாநாட்டுக் காட்சிகள்
















குடந்தை மாவட்ட பொது மேலாளர் அலுவலக
NFTE - கிளை மாநாடு மற்றும் மாநில அளவில் சஞ்சார் சேவா பதக்கம் பெற்ற நமது சங்க மூத்த தோழர். P.பட்டுசாமி, SSS(O) அவர்களுக்கு பாராட்டு விழாவும் 25.09.2010 அன்று தோழர்.R. ஜெயபால், மாநில துணை தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

NFTE மாநில செயலாளர் தோழர் R. பட்டாபிராமன் மற்றும் குடந்தை மாவட்ட FNTO மாவட்ட தலைவர் தோழர்.R. ராஜராஜன் பதக்கம் பெற்ற தோழர். P.பட்டுசாமியை பாராட்டியும் கிளை மாநாட்டை வாழ்த்தியும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

கிளை மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வாழ்த்துக்களுடன்

NFTE - மாவட்ட சங்கம்

& NFTE-TMTCLU மாவட்ட சங்கம்







Sunday, September 26, 2010

மாவீரன் பகத்சிங்


இன்று (27-09-2010) - மாவீரன் பகத்சிங்கின் 103-வது பிறந்த தினம்.



'ப'ஞ்ச நதிக் கரையில் பிறந்தவன்
'க'டல் அலை போல் ஓயாத உழைப்பை கொண்டவன்
'வ'ற்றாத ஜீவ நதியாய் மக்கள் மனதில் நிற்பவன்
'த்' ராகவத்தின் வீரியம் மிக்கவன் - வெள்ளையரின்
'சி'றை கூடங்களை புரட்சி கூடங்களாக மாற்றியவன்
'ங்' என்ற மெய் எழுத்தாய் ஆனவன்



நன்றி: ஜனசக்தி.

1931 ம் வருடம் மார்ச் 23 அன்று பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்ட அம் மாவீரனுக்கு வயது 23 தான். தேச விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த அத் தோழனை எண்ணிப்பார்ப்பது கூட தியாக உணர்வை வளர்க்கும்.


இதோ பகத் சிங் - வீர வரலாறு - ஆங்கிலத்தில்


Singh, Bhagat (1907-1931)
Bhagat Singh was born on 27 September 1907.
Indian revolutionary and a major figure in the Indian independence movement of the early Twentieth Century. Singh was active in revolutionary struggle from an early age and he was briefly affiliated with the Mohandas Ghandi’s “Non-Cooperation” movement, although Singh would break with Ghandi’s philosophy of non-violent resistance later in life.
Singh embraced atheism and Marxism-Leninism and integrated these key components into his philosophy of revolutionary struggle. Under his leadership, the Kirti Kissan Party was renamed the Hindustan Socialist Republican Organization. As Singh and his organization rose to new prominence in the Indian independence movement, they became the focus of public criticism from Ghandi himself, who disagreed with their belief that violence was a necessary and vital component of revolutionary struggle.
Singh’s secularism was perhaps his most important contribution to the socialist and independence struggles. During those turbulent times, British Imperialism used every tactic to create antagonism among the different religions of India, especially between Hindus and Muslims. The Sanghatan and Shuddi Movements among Hindus; and tableegh and many sectarian movements in Muslims bear witness to the effects of this tactic. Bhagat Singh removed his beard which was a violation of Sikh religion, because he did not want to create before the public the image of a ‘Sikh’ freedom fighter. Nor did he want to be held up as a hero by the followers of this religion. He wanted to teach the people that British Imperialism was their common enemy and they must be united against it to win freedom.
On April 8, 1924, Baghat Singh and his compatriot B. K. Dutt hurled two bombs on to the floor of the Central Delhi Hall in New Delhi. The bombs were tossed away from individuals so as not to harm anyone and, in fact, no one was harmed in the ensuing explosions. Following the explosions, Singh and Dutt showered the hall with copies of a leaflet that later was to be known as “The Red Pamphlet.” The pamphlet began with a passage which was to become legendary in the Indian revolutionary struggle:
“It takes a loud voice to make the deaf hear, with these immortal words uttered on a similar occasion by Vaillant, a French anarchist martyr, do we strongly justify this action of ours.”
Singh and Dutt concluded the pamphlet with the phrase “Long Live the Revolution!” This phrase (translated from “Inquilab Zindabad!” became one of the most enduring slogans of the Indian Independence Movement.
Singh and Dutt turned themselves in following the bombing incident. Following the trial, they were sentenced to “transportation for life” and while imprisoned, Singh and Dutt became outspoken critics of the Indian penal system, embarking on hunger strikes and engaging in agitation and propaganda from within the confines of the prison. Shortly after the commencement of his prison sentence, Singh was implicated in the 1928 death of a Deputy Police Superintendent. Singh acknowledged involvement in the death and he was executed by hanging on 23 March 1931.

Thursday, September 23, 2010

GM அலுவலக கிளை மாநாடு

தோழமையுடன்,
மாவட்ட சங்கம்

ஆடுதுறை கிளை ஆண்டுவிழா

ஆடுதுறை தொலைபேசி நிலையத்தில் 25.09.2010 அன்று காலை 10.00 மணி அளவில் ஆடுதுறை கிளை ஆண்டு விழா நடை பெற இருக்கின்றது.

தலைமை :
தோழர்.R. ஜெயபால், மாநில து.தலைவர்,
தோழர்.S. பாஸ்கரன், மாவட்ட செயலர்

கோடியேற்றி கல்வெட்டினை திறந்து சிறப்புரை :
தோழர். R.பட்டாபிராமன், மாநில செயலர்

தோழர்களும், தோழியர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

தோழமையுடன்
மாவட்ட சங்கம்.

Sunday, September 19, 2010

கண்ணீர் அஞ்சலி

திருபுறம்பியம் பகுதியில் பணிபுரிந்து தற்போது கும்பகோணம் டவர் மைன்டேனன்ஸ் TM-ஆக பணிபுரியும் தோழர்.R. முத்துகிருஷ்ணன் அவர்களின் 22 வயது மூத்த மகன் M. கணேசன் அவர்கள் சாலை விபத்தில் 18.09.2010 அன்று மாலை 5.15 மணியளவில் அகால மரணமடைந்தார். மகனை பிரிந்துவாடும் தோழரின் குடும்பத்திற்கு நமது கண்ணீர் அஞ்சலி.

கண்ணீருடன்

மாவட்ட சங்கம்.

18.09.2010

தோழருக்கு பாராட்டு

தமிழ்நாடு மாநில அளவில்
2009-2010க்கான சஞ்சார் சேவா பதக்கம் வென்ற
நமது சங்க மூத்த தோழர். P. பட்டுசாமி, SS(O)
அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மகிழ்வுடன்
NFTE - மாவட்ட சங்கம்
16.09.2010

Thursday, September 16, 2010

EPF வட்டி விகிதம்

EPF வட்டி விகிதம் கடந்த 5 வருடங்களாக 8.5% - ஆகவே இருந்து வந்தது. நடப்பாண்டில் (2010-11)-ல் அது 1% உயர வாய்ப்புள்ளதாகவே தெரிகின்றது. அதாவது EPF வட்டி விகிதம் 8.5% - லிருந்து 9.5% ஆக உயர இருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.
தோழமையுடன்
TMTCLU - மாவட்ட சங்கம்.
குடந்தை மாவட்டம்.
16.09.2010.

Tuesday, September 14, 2010

ஓபன் டெண்டர் - ஒரு அலசல்

தோழர்களே!!


வணக்கம். 01.10.2006 முதல் 31.05.2010 வரை நம்மால் நடத்தப்பட்ட லிமிடெட் டெண்டர் முறையை பற்றி பல்வேறு சங்கங்கள் விமர்சனம் செய்ததின் விளைவாக தஞ்சாவூர் பொதுமேலாளர் ஓபன் டெண்டரை NIT எனப்படும் தினசரி நாளிதழ்களில் அவசர அவசரமாக டெண்டர் டாக்குமெண்டை சரியாக கூட சரி பார்க்காமல் 01.05.2010 அன்று வெளிவரச் செய்தார்.


01.05.2010 அன்று டெண்டர் டாக்குமெண்டை பார்த்த நமக்கு பெரும் அதிர்ச்சி. ஏனெனில் தனியார் டெண்டர் முறைக்கு வக்காலத்து வாங்கிய அனைத்து சங்கங்களும் தண்டோரா போட்ட கீழ்க்கண்ட விசயங்கள் ஒன்றை கூட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.


1) ஓபன் டெண்டர் முறை வந்தால் நாள் ஒன்றுக்கு 8 மணி நேர சம்பளம்.


2) சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை.


3) இதர சலுகைகள் கிடைக்கும்.


NFTE சங்கம் இதனை நமக்காக நிர்வாகத்தின் கவனத்திற்கு இந்த தவறுகளை கொண்டு சென்ற போது, நேர அளவுகளில் மாற்றம் செய்வது உட்பட லிமிடெட் டெண்டரில் பணிபுரியும் அனைவருக்கும் வேலை கண்டிப்பாக தரப்படும் என உத்திரவாதம் அளித்தது.


வரலாறு காணாத பாதுகாப்புடன் 18.05.2010 அன்று டெண்டர் ஓபன் ஆனது. அதன் பின் டெண்டர் போர்மாளிட்டி எல்லாம் முடிந்து 01.06.2010 முதல் ஓபன் டெண்டர் முறை அமலுக்கு வந்தது.


நிர்வாகம் தான் செய்த தவறின் காரணமாக டெண்டரில் வரையறுத்த நேர அளவுகளில் எந்த மாற்றமும் செய்ய முடியாமல் திணறியது.


ஓபன் டெண்டரை வரவேற்ற சங்கங்கள் சொல்லியது போல் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் என்றால் 234 தோழர்கள் வேலை பார்த்த இடத்தில 179 தோழர்களே வேலை செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.


நமக்கு (NFTE-TMTCLU) அதில் உடன்பாடு இல்லாததால் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தோம். நிர்வாகம் பின்பு நாட்கள் அவகாசம் கேட்டதன் விளைவாக வேலை நிறுத்ததை ஒத்திவைத்தோம். நிர்வாகம் தான் செய்த தவறை மறைக்க இரவு பகலாக யோசித்து தற்போது அலுவலகத்தில் 8 மணி நேரம் வேலை செய்யும் அனைவருக்கும் நாள் ஒன்றுக்கு 6 மணி சம்பளமும், எச்சென்ஜிகளில் 12 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு 6.5 மணி சம்பளமும் வழங்குவதாக அறிவித்தது.


அதன்படி நாள் ஒன்றுக்கு சம்பளம் - 8 மணி நேரத்திற்கு கலெக்டர் ரேட் - 126 லிருந்து - 6 மணிநேரத்திற்கு ரூபாய் 94.50 ஆகவும் EPF+ESI பிடித்தம் போக நாள் ஒன்றுக்கு 81.50 ஆகவும் 6.5 மணி நேரத்திற்கு ரூபாய் 88.25 ஆகவும் நிர்வாகம் அறிவித்தது.


நாம் ஏற்கனவே லிமிடெட் டெண்டர் முறையில் நாள் ஒன்றுக்கு பிடித்தம் போக ரூபாய் 87.50 வாங்கியதை கூறவும், உங்களுக்கு விடுமுறையுடன் கூடிய சம்பளமாக 30 நாட்களுக்கு - 6 மணிநேரத்திற்கு - ரூபாய் 2445/- ஆகவும் 6.5 மணிநேரத்திற்கு ரூபாய் 2648/- ஆகவும் நிர்ணயம் செய்தது. அடுத்த டெண்டரில் 8 மணி நேரம் கண்டிப்பாக தருவதாக நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

பின்னர் சென்ட்ரல் லேபர் கமிஷன் உத்தரவு அமலுக்கு வந்ததன் விளைவாக விடுமுறையுடன் கூடிய சம்பளமாக 30 நாட்களுக்கு - 6 மணிநேரத்திற்கு - ரூபாய் 2892/- ஆகவும் 6.5 மணிநேரத்திற்கு ரூபாய் 3132/- ஆகவும் சம்பளம் பட்டுவாடா செய்யப் படுகிறது.


ஓபன் டெண்டரை ஆதரித்த அணைத்து சங்கங்களும் ஓபன் டெண்டர் வெளிவந்த பின் - 8 மணி நேர சம்பளம் பற்றி கேட்டால் முழிக்கிறார்கள். இதுவரை நமது கோரிக்கைகளுக்காக GM / DGM மையோ கூட எவரும் பார்க்கவில்லை.


லிமிடெட் டெண்டர் முறையின் போது மாதம் ஒன்றுக்கு ரூபாய் 8 லட்சம் செலவு ஆனது. தற்போதுள்ள ஓபன் டெண்டர் முறைக்கு CONTRACTOR சர்வீஸ் சார்ஜ் ரூபாய் 1,20,000/- சேர்த்து மொத்தம் ஆகும் செலவு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 12 லட்சம்.


ஓபன் டெண்டர் - ஆள் தொழிலாளிக்கு எந்த பயனும் இல்லை. 8-12 மணி நேர உழைப்பிற்கு 6 மணி நேர சம்பளம். ஆனால் எதையும் செய்யாத முதலாளிக்கு மாதம்தோறும் சர்வீஸ் சார்ஜ் ஆக ரூபாய் 1,20,000/-.


தொழிலாளியின் உழைப்பை சுரண்டும் நிர்வாகத்தை தட்டி கேட்பது சங்கமா? அல்லது முதலாளிகளின் கையில் தொழிலாளிகளை அடகு வைத்தது சங்கமா?

நாம் முறையாக கட்டிய EPF பணத்திற்கு கணக்கு கேட்க்கும் சில அதிகாரிகளும், சில லெட்டர் பேட் சங்கங்களும் அலுவலகத்தில் பிடித்தம் செய்த தொழிலாளிகளின் ESI பணத்தை பற்றி வாய் திறக்க மறுப்பதேன்? (அல்லது) 01.06.2010 முதல் 31.08.2010 வரை ஓபன் டெண்டர் CONTRACTOR-ஆல் இதுவரை நிர்வாகத்தின் EPF பங்கு 13.61% மற்றும் தொழிலாளின் பங்கு 12% பற்றி எந்த அதிகாரியும் கேட்காதது ஏன்?

தெளிந்த நிறோடையை போல் மாறுவோம்!!


அநீதியை அழிக்க ஆர்ப்பரிப்போம்!!


தோழமையுடன்

TMTCLU - மாவட்ட சங்கம் ,

குடந்தை மாவட்டம்.

13.09.2010.


Thursday, September 9, 2010

புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்

தோழர்கள் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகஸ்ட் மாத சம்பளம் CONTRACTOR - ஆல் வங்கியில் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. தோழர்கள் வங்கியிலிருந்து சம்பள பணத்தை எடுத்துக்கொள்ளவும்.

தோழமையுடன்
TMTCLU - மாவட்ட சங்கம்,
குடந்தை மாவட்டம்
09.09.2010.

Tuesday, September 7, 2010

மனமகிழ்ச்சி தரும் தகவல்

நமது EPF கணக்கில் நாம்

கட்டிய பணத்தின்

விவரங்களை EPF

அலுவலகம் தனது
இணையதலத்தில் ஏற்றி உள்ளனர்.
அதனை காண
http://www.epfochennai.tn.nic.in/tnepf/CreditDetailInput.aspx
மகிழ்வுடன்
TMTCLU - மாவட்ட சங்கம்,
குடந்தை மாவட்டம்.





Thursday, August 19, 2010

தமிழ் மாநில தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம்

(TMTCLU)
குடந்தை மாவட்டம்
தோழர்களே! வணக்கம்!!

நமது புதிய இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

நமது ஆசான் தோழர். R. ஜெயபால், NFTE மாவட்ட தலைவர் அவர்களை முதலில் வணங்கி நமது முதல் முயற்சியை தொடங்குகிறோம்.

எங்களை வழி நடத்தும் மாவட்டச்செயலாளர் தோழர். S.பாஸ்கரன், தோழர். G. கலியமூர்த்தி, தோழர். விஜய் ஆரோக்கியராஜ், தோழர்.J. ஸ்ரீனிவாசன், அவர்களுக்கும் எங்கள் நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த முயற்சியை ஊக்குவித்த எங்களது சக தோழர்கள். அதியமான், பிரகாஷ், குருப்ஸ் ராஜேஷ், காரைக்கால் செந்தில், ஆடுதுறை ராமகிருஷ்ணன், நாட்சியார்கோயில் நந்தகுமார், குத்தாலம் தமிழ்வாணன் ஆகியோர்க்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்களின் நிறை மற்றும் குறைகளை எங்களுக்கு உடன் தெரியபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்
TMTCLU மாவட்ட சங்கம்,
குடந்தை மாவட்டம்.