குடந்தை மாவட்ட NFTE ஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது....
தோழர்களே! தோழியர்களே!! நம் வாழ்வு காத்திட, நம் நிறுவனம் நிலைத்திட வாக்களியுங்கள் இணைந்த கரங்களில்! தேர்வு செய்வீர் எண் : 13. நன்றி.........

Tuesday, September 14, 2010

ஓபன் டெண்டர் - ஒரு அலசல்

தோழர்களே!!


வணக்கம். 01.10.2006 முதல் 31.05.2010 வரை நம்மால் நடத்தப்பட்ட லிமிடெட் டெண்டர் முறையை பற்றி பல்வேறு சங்கங்கள் விமர்சனம் செய்ததின் விளைவாக தஞ்சாவூர் பொதுமேலாளர் ஓபன் டெண்டரை NIT எனப்படும் தினசரி நாளிதழ்களில் அவசர அவசரமாக டெண்டர் டாக்குமெண்டை சரியாக கூட சரி பார்க்காமல் 01.05.2010 அன்று வெளிவரச் செய்தார்.


01.05.2010 அன்று டெண்டர் டாக்குமெண்டை பார்த்த நமக்கு பெரும் அதிர்ச்சி. ஏனெனில் தனியார் டெண்டர் முறைக்கு வக்காலத்து வாங்கிய அனைத்து சங்கங்களும் தண்டோரா போட்ட கீழ்க்கண்ட விசயங்கள் ஒன்றை கூட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.


1) ஓபன் டெண்டர் முறை வந்தால் நாள் ஒன்றுக்கு 8 மணி நேர சம்பளம்.


2) சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை.


3) இதர சலுகைகள் கிடைக்கும்.


NFTE சங்கம் இதனை நமக்காக நிர்வாகத்தின் கவனத்திற்கு இந்த தவறுகளை கொண்டு சென்ற போது, நேர அளவுகளில் மாற்றம் செய்வது உட்பட லிமிடெட் டெண்டரில் பணிபுரியும் அனைவருக்கும் வேலை கண்டிப்பாக தரப்படும் என உத்திரவாதம் அளித்தது.


வரலாறு காணாத பாதுகாப்புடன் 18.05.2010 அன்று டெண்டர் ஓபன் ஆனது. அதன் பின் டெண்டர் போர்மாளிட்டி எல்லாம் முடிந்து 01.06.2010 முதல் ஓபன் டெண்டர் முறை அமலுக்கு வந்தது.


நிர்வாகம் தான் செய்த தவறின் காரணமாக டெண்டரில் வரையறுத்த நேர அளவுகளில் எந்த மாற்றமும் செய்ய முடியாமல் திணறியது.


ஓபன் டெண்டரை வரவேற்ற சங்கங்கள் சொல்லியது போல் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் என்றால் 234 தோழர்கள் வேலை பார்த்த இடத்தில 179 தோழர்களே வேலை செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.


நமக்கு (NFTE-TMTCLU) அதில் உடன்பாடு இல்லாததால் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தோம். நிர்வாகம் பின்பு நாட்கள் அவகாசம் கேட்டதன் விளைவாக வேலை நிறுத்ததை ஒத்திவைத்தோம். நிர்வாகம் தான் செய்த தவறை மறைக்க இரவு பகலாக யோசித்து தற்போது அலுவலகத்தில் 8 மணி நேரம் வேலை செய்யும் அனைவருக்கும் நாள் ஒன்றுக்கு 6 மணி சம்பளமும், எச்சென்ஜிகளில் 12 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு 6.5 மணி சம்பளமும் வழங்குவதாக அறிவித்தது.


அதன்படி நாள் ஒன்றுக்கு சம்பளம் - 8 மணி நேரத்திற்கு கலெக்டர் ரேட் - 126 லிருந்து - 6 மணிநேரத்திற்கு ரூபாய் 94.50 ஆகவும் EPF+ESI பிடித்தம் போக நாள் ஒன்றுக்கு 81.50 ஆகவும் 6.5 மணி நேரத்திற்கு ரூபாய் 88.25 ஆகவும் நிர்வாகம் அறிவித்தது.


நாம் ஏற்கனவே லிமிடெட் டெண்டர் முறையில் நாள் ஒன்றுக்கு பிடித்தம் போக ரூபாய் 87.50 வாங்கியதை கூறவும், உங்களுக்கு விடுமுறையுடன் கூடிய சம்பளமாக 30 நாட்களுக்கு - 6 மணிநேரத்திற்கு - ரூபாய் 2445/- ஆகவும் 6.5 மணிநேரத்திற்கு ரூபாய் 2648/- ஆகவும் நிர்ணயம் செய்தது. அடுத்த டெண்டரில் 8 மணி நேரம் கண்டிப்பாக தருவதாக நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

பின்னர் சென்ட்ரல் லேபர் கமிஷன் உத்தரவு அமலுக்கு வந்ததன் விளைவாக விடுமுறையுடன் கூடிய சம்பளமாக 30 நாட்களுக்கு - 6 மணிநேரத்திற்கு - ரூபாய் 2892/- ஆகவும் 6.5 மணிநேரத்திற்கு ரூபாய் 3132/- ஆகவும் சம்பளம் பட்டுவாடா செய்யப் படுகிறது.


ஓபன் டெண்டரை ஆதரித்த அணைத்து சங்கங்களும் ஓபன் டெண்டர் வெளிவந்த பின் - 8 மணி நேர சம்பளம் பற்றி கேட்டால் முழிக்கிறார்கள். இதுவரை நமது கோரிக்கைகளுக்காக GM / DGM மையோ கூட எவரும் பார்க்கவில்லை.


லிமிடெட் டெண்டர் முறையின் போது மாதம் ஒன்றுக்கு ரூபாய் 8 லட்சம் செலவு ஆனது. தற்போதுள்ள ஓபன் டெண்டர் முறைக்கு CONTRACTOR சர்வீஸ் சார்ஜ் ரூபாய் 1,20,000/- சேர்த்து மொத்தம் ஆகும் செலவு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 12 லட்சம்.


ஓபன் டெண்டர் - ஆள் தொழிலாளிக்கு எந்த பயனும் இல்லை. 8-12 மணி நேர உழைப்பிற்கு 6 மணி நேர சம்பளம். ஆனால் எதையும் செய்யாத முதலாளிக்கு மாதம்தோறும் சர்வீஸ் சார்ஜ் ஆக ரூபாய் 1,20,000/-.


தொழிலாளியின் உழைப்பை சுரண்டும் நிர்வாகத்தை தட்டி கேட்பது சங்கமா? அல்லது முதலாளிகளின் கையில் தொழிலாளிகளை அடகு வைத்தது சங்கமா?

நாம் முறையாக கட்டிய EPF பணத்திற்கு கணக்கு கேட்க்கும் சில அதிகாரிகளும், சில லெட்டர் பேட் சங்கங்களும் அலுவலகத்தில் பிடித்தம் செய்த தொழிலாளிகளின் ESI பணத்தை பற்றி வாய் திறக்க மறுப்பதேன்? (அல்லது) 01.06.2010 முதல் 31.08.2010 வரை ஓபன் டெண்டர் CONTRACTOR-ஆல் இதுவரை நிர்வாகத்தின் EPF பங்கு 13.61% மற்றும் தொழிலாளின் பங்கு 12% பற்றி எந்த அதிகாரியும் கேட்காதது ஏன்?

தெளிந்த நிறோடையை போல் மாறுவோம்!!


அநீதியை அழிக்க ஆர்ப்பரிப்போம்!!


தோழமையுடன்

TMTCLU - மாவட்ட சங்கம் ,

குடந்தை மாவட்டம்.

13.09.2010.


No comments:

Post a Comment